1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. செ‌ய்‌திக‌ள்

இலவச கல்லூரி பாட புத்தக‌த்‌தி‌ற்கு...

இலவச கல்லூரி பாட புத்தக‌த்‌தி‌ற்கு...
கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் திங்களகிழமை முதல் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து ராஜஸ்தான் இளைஞர் கல்வி அறக்கட்டளை விடுத்துள்ள செ‌ய்‌தி‌யி‌ல், புத்தக விலையேற்றம் ஆகியவற்றின் காரணமாக மாணவர்களின் கல்லூரி படிப்பு பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் ராஜஸ்தான் இளைஞர் சங்க புத்தக வங்கித் திட்டம் சென்னை மற்றும் சுற்றுப்புற மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

இத்திட்டத்தின் கீழ் 2008-09 கல்வியாண்டுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வேப்பேரியில் உள்ள அட்கின்சன் பேலசில் வழங்கப்பட உள்ளது.

கலை, அறிவியல் மற்றும் பொறி‌யியல் கல்லூரி பயிலும் மாணவர்கள், கல்லூரிக்குச் செலுத்திய கல்விக் கட்டண ரசீதுடன் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
About Writer
Webdunia