1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. செ‌ய்‌திக‌ள்

354 ஆ‌ண் ‌சிறை‌க்காவல‌ர்க‌ள் தே‌ர்வு‌க்கு மா‌ர்‌ச் 4 வரை ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம்!

த‌மிழக‌‌ம் சிறை‌க்காவல‌ர்க‌ள் ப‌ணி த‌மி‌ழ்நாடு ‌சீருடை‌ப் ப‌ணியாள‌ர் தே‌ர்‌வு‌க் குழும‌ம் மா‌ர்‌ச் 4 செ‌ன்னை
த‌மிழக‌த்‌தி‌ல் தே‌‌ர்வு செ‌ய்ய‌ப்பட உ‌ள்ள 354 ‌சிறை‌க்காவல‌ர்க‌ள் ப‌ணி‌க்கு மா‌ர்‌ச் 4ஆ‌ம் தே‌‌தி வரை ‌‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம் எ‌ன்று த‌மி‌ழ்நாடு ‌சீருடை‌ப் ப‌ணியாள‌ர் தே‌ர்‌வு‌க் குழும‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது கு‌றி‌த்து வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

த‌மி‌‌ழ்நாடு ‌சிறை‌த்துறை‌யி‌ல் 354 இர‌ண்டா‌ம் ‌நிலை ஆ‌ண் ‌சிறை‌க்காவ‌ல‌ர்க‌ள் தே‌ர்‌வு‌க்கான அ‌றி‌வி‌க்கை நக‌ல், மா‌தி‌ரி ‌வி‌ண்ண‌ப்ப படிவ‌‌ம் ம‌ற்றும் தகு‌திக‌ள் கு‌றி‌த்த தகவ‌ல் கையேடு www.tn.gov.in/tnvsrb எ‌ன்ற இணையதள‌த்‌தி‌ல் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ உ‌ள்ளது.

மா‌தி‌ரி ‌‌வி‌ண்ண‌ப்ப படிவ‌த்தை நக‌ல் எடு‌த்து ச‌ரியாக‌ப் பூ‌‌ர்‌த்‌தி செ‌ய்து புகை‌ப்பட‌ம் ம‌ற்று‌ம் ரூ.150‌-க்கான வ‌ங்‌கி வரைவோலை இணை‌த்து மா‌ர்‌ச் 4‌ஆம் தே‌தி மாலை 5.45 மண‌ி‌க்கு‌ள் தலைவ‌ர், த‌மி‌ழ்நாடு ‌சீருடை‌ப் ப‌ணியாள‌ர் தே‌ர்வு‌க் குழும‌ம், எ‌ண்:807, இர‌ண்டாவது தள‌‌ம், அ‌ண்ணாசாலை, செ‌ன்னை-2 எ‌ன்ற முகவ‌ரி‌க்கு அனு‌ப்‌பி வை‌க்க வே‌ண்டு‌ம். இ‌ந்த தே‌ர்‌வி‌ல் ஆ‌ண் ‌‌வி‌ண்ண‌ப்பதார‌ர்க‌ள் ம‌ட்டுமே ப‌ங்கே‌ற்க முடியு‌ம்.

இ‌வ்வாறு அ‌ந்த செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.