1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. செ‌ய்‌திக‌ள்

11ல் செவிலியர் படிப்பிற்கான கலந்தாய்வு

எம்.எஸ்சி (நர்சிங்)
அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.எஸ்சி (நர்சிங்), எம்.பார்மசி, எம்.பி.டி. (பிசியோதெரபி) படிப்புளுக்கான கலந்தாய்வு வரும் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்கக வளாகத்தில் நடைபெறுகிறது. 11ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை வரையும், 12ஆம் தேதி காலை பார்மசி கலந்தாய்வும், பிற்பகலில் பிசியோதெரபி கலந்தாய்வும் நடைபெறும்.

கலந்தாய்வு கால அட்டவணை தமிழக அரசின் சுகாதாரத் துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.