1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. க‌ல்‌வி

14 இட‌ங்க‌ள் அ‌திக‌‌ரி‌ப்பு: 22இ‌ல் நர்சிங் கல‌ந்தா‌ய்வு!

நர்சிங் கலந்தாய்வு சென்னை எம்எஸ்சி
2008-09 ஆ‌ம் ஆ,‌ண்டு‌க்கான எம்.எஸ்.சி. நர்சிங் பட்ட மேற்படிப்பில் கூடுதலாக 14 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 22ஆ‌ம் தேதி சென்னையில் நடக்கிறது.

இந்த கலந்தாய்வு கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்ககத்தில் உள்ள தேர்வுக்குழுவில் காலை 10 ம‌ணி‌‌க்கு தொட‌ங்கு‌ம் என்று மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாணவ‌ர்களு‌க்கு கடித‌ம் அனு‌ப்‌பி வை‌க்க‌ப்படு‌ம். மேலும் விவரம் வேண்டுவோர் www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பா‌ர்‌த்து தெ‌ரி‌ந்துகொ‌ள்ளலா‌ம்.
About Writer
Webdunia