1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (13:12 IST)

மருதாணியை கைகளில் பூசுவதால் இத்தனை நன்மைகளா...!!

மருதாணி செடியின் வேர், நோயை நீக்கி உடலைத் தேற்றும், மருதாணி பூக்களைச் உலர்த்தி தலையணை போல் செய்து அதில் படுத்து வந்தால்  நல்ல தூக்கம் உண்டாவதுடன், பேன் பிரச்சனையும் குறையும்.

மருதாணி இலையுடன் சிறிது பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, மற்றும் கால் நகங்களின் மீது வைத்து விடவேண்டும். பின்னர் காலையில் எழுந்து கழுவி விடவேண்டும். இவ்வாறு 15 நாளுக்கு ஒரு முறை செய்து வந்தால் நகம் சொத்தையாவது தடுக்கப்படும்.
 
மருதாணியை கைகளில் பூசுவதால் நகங்களில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுகின்றன. எனவே நகச்சுத்தி போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது உடல் சூட்டை குறைத்து விடுகிறது.
 
நீண்ட நாட்களாக இருந்து வரும் ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து பின் வாய் கொப்பளிக்கலாம். இப்படி செய்வதால் வாயில் உள்ள கிருமிகள் அழியும், புண்களும் ஆறும்.
 
அம்மை நோய் ஏற்பட்டவர்களுக்கு நோய் குணமானாலும் அம்மை தழும்புகள் உடனே குணமாகாது. அப்படிப்பட்டவர்கள் மருதாணி இலைகளை அரைத்து அம்மை புண்கள் மேல் பூசி வரலாம். இப்படி பூசி வந்தால் அம்மை புண்கள் 3 முதல் 5 நாட்களில் குணமாகும். வெயில்  கட்டிகளுக்கும் அரைத்துப் பற்று  போடலாம், விரைவில் குணமாகும்.
 
அனைத்து வகையான தலைமுடி பிரச்சனைகளுக்கும் மருதாணி இலைகளை அரைத்து பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலையில் தடவி வந்தால் பொடுகு பிரச்சனை தீரும், மேலும் தலைமுடி மென்மையாகி பளபளக்கும். மருதாணி இலைகள் அரைத்து நெற்றியில் தடவினால் தீராத தலைவலியும் தீரும்.