1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இரும்புச்சத்து குறைபாட்டை உணர்த்தும் சில அறிகுறிகள் என்ன....?

இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இரும்பு சத்து மிகவும் அவசியம். 

சரிவிகித உணவை சரியாக சாப்பிடாமல் இருப்பதே இதற்கு காரணம். சாப்பிடாமல் இருப்பதால் உடம்பில் ஹீமோகுளோபின் குறைய ஆரம்பிக்கிறது. 
 
ஹீமோகுளோபின் குறைந்தால் உடல் ஆற்றல் குறைந்து எப்போதும் சோர்வாக இருக்கும். இப்படியான அறிகுறிகள் இரும்புச் சத்துக் குறைபாட்டிற்கு முக்கிய  காரணிகளாக உள்ளன. 
 
உங்கள் சருமம் வெளிரிய நிறத்தில் இருக்கும். சில பேருக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு காரணம் இரும்புச் சத்துக் குறைபாடே. இப்படி வாயின் உள்பக்கம்  இரத்த ஓட்டம் இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருத்தல், உதடு, விரல் நகங்கள் நன்கு வெள்ளை நிறத்தில் மாறுதல் எல்லாம் இரும்புச் சத்து உடம்பில் இல்லாமல்  இருத்தலே ஆகும்.
 
அன்றாட உணவில் போதிய அளவு இரும்புச் சத்து உணவுகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதையென்றால் பெருங்குடலில் இருக்கும் நாடாப்புழு  இரும்புச் சத்தை உறிஞ்சிக் கொள்வது, சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச் சத்தை உடல் கிரகிக்க முடியாமல் போய்விடும்.
 
இரும்பு சத்து இல்லையென்றால் எலும்பு மஜ்ஜை பாதிப்படையும். மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும். அதிகளவில் ரத்தப் போக்கு ஏற்படும். உடலில் எந்த ஒரு செல் வளர வேண்டும் என்றாலும் அதன் வளர்ச்சிக்கு வைட்டமின் பி12 அவசியம். வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் ரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு  வளராமல் ரத்த சோகை ஏற்பட்டுவிடும்.
 
படிகட்டு ஏறினால் மூச்சு வாங்குதல், நடந்தால் மூச்சு வாங்குதல் என கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு வேலை செய்தாலும் மூச்சு வாங்குகிறது எனில் சாதாரணமாக  இருக்காதீர்கள். அதுவும் இரும்புச் சத்துக் குறைபாடின் அறிகுறிதான்.