வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (16:13 IST)

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் திப்பிலி !!

திப்பிலி ஆஸ்துமா, இருமல், தொண்டை புண், மூச்சுக்குழாய் அழற்சி என நுரையீரல் பிரச்சனைகளைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. அதோடு சுவாசப் பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.


திப்பிலி அதன் நோய் எதிர்ப்பு பண்பு காரணமாக வயிற்றுப் புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

வாய் சுகாதாரத்தை பாதுகாப்பதில் திப்பிலி முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல் வலி, வாய்வழிப் பிச்சனைகளைக்கு நிவாரணியாக உள்ளது. பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணியாக இருக்கிறது.

எடை மற்றும் கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கொழுப்பை கரைத்து உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது

திப்பிலி பழத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது. இது ஆயுர்வேத முறையிலும் தூக்கமின்மைக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. உடல் வலியை போக்க உதவுவதால் அதோடு தூக்கத்தை தூண்டுகிறது.

வாயு பிரச்சனை, நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சனைகளுக்கு உதவுகிறது. இதில் ப்ரீபயாடிக் என்னும் ஆற்றல் இருப்பதால் வயிற்றுக் கோளாறுகள், வயிற்றுப் புண் போன்ற நோய் எதிர்ப்பு பண்பு காரணமாக உண்டாகும் பிரச்சனைகளுக்கு உதவுகிறது.

திப்பிலியில் உள்ள பைப்பரின், செயலில் உள்ள ஆல்கலாய்டு கெமோபுரோடெக்டிவ் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது புற்றுநோய் உயிரணுக்கள் அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது.