1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அனைத்து பாகங்களும் மருத்துவ நன்மைகள் கொண்ட எருக்கன் செடி...!!

எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. எருக்கன் செடியின் இலைகளை நன்கு காயவைத்து, அதனைப் பொடித்து புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் ஆறும்.
எருக்கன் செடியின் இலைச்சாறுடன், சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து, கடுகு எண்ணெய்யில் வேகவைத்து, பின்பு இதை தோலில் ஏற்படும்  படை, சொறி, சிரங்கு போன்றவற்றிற்கு தடவினால் விரைவில் குணமாகும்.
 
நல்ல பாம்பு கடித்து விட்டால் உடனே எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட சொல்ல வேண்டும். இதனால் விஷம் இறங்கிவிடும். இதன் பின்னர் மருந்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
 
பழுத்த இலையை குதிகால் வீக்கத்தின் மீது வைத்து சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து ஒத்தடம் கொடுத்து வர குதிகால் வீக்கம்  சரியாகும்.
 
எருக்கன் பூவை காய வைத்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 200 கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், பால்வினை நோய், தொழு நோய் குணமாகும். 
 
வேரை கரியாக்கி விளகெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் கரப்பான். பால்வினை நோய்ப் புண்கள் ஆறாத காயங்கள் ஆறும். 
 
காலில் முள் தைத்தால், எருக்கு இலையை உடைத்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் பூசிக்கொள்வார்கள். இதனால் வலி குறைவதுடன், அந்த இடம் குத்திய முள் வெளியே வந்துவிடும் இதை இன்றைக்கும் கிராமங்களில் பார்க்கலாம்.