1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கண்களை பிரகாசிக்க செய்ய உதவும் சில எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்...!!

கண்கள் ஒளி பெற, கண் எரிச்சல் நீங்க, கண்கள் குளிர்ச்சியடைய, கண் வலி அனைத்திற்கும் தீர்வு நம் வீட்டு சமையலறையிலும், தோட்டத்திலுமே உள்ளது.

அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து பொடிசெய்து தேன் கலந்த சுடுநீரில் சாப்பிட கண் எரிச்சல் குணமாகும். வாரத்திற்கு இரண்டு முறையாவது  உணவுடன் வெண்டைக்காய் சேர்த்து சாப்பிட மூளை பலமடையும், கண்களும் குளிர்ச்சியடையும்.
 
கண்கள் சிவப்பாக இருந்தால் ஆடாதோடா விதை நான்கும், கடுக்காய் மூன்றும், நெல்லிக்காய் விதை இரண்டும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர நலம் பெறலாம்.
 
கண்சூடு குறைய நெல்லிக்காய் சாறு பிழிந்து ஒவ்வொரு ஸ்பூன் இருவேளை குழந்தைகளுக்கு கொடுத்துவர குணமாகும். முருங்கை பூவை பருப்புடன் சேர்த்து  சமைத்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும், கண்நோய் அனைத்தும் குணமாகும். 
 
கண் பிரகாசமாக ஒரு கரண்டி சீரகம் தூள் செய்து நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைகுளித்து வரலாம். சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து கொள்ளலாம்.
 
பற்படாகம் இலையை பாலில் அரைத்து பூசி குளித்து வரலாம். உடல் நாற்றம் நீங்கும். உடற்சூட்டினால் வரும் நீர்கோளைக்கு கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து அரைத்து, சிறு உருண்டை சாப்பிட பிரச்னை நீங்கும்.
 
எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது பச்சைத் தண்ணீர் சேர்க்காமல் மிதமான சூட்டில் மட்டுமே குளிக்க வேண்டும். பாதாம் பருப்பு வறுத்து அடிக்கடி உண்டு வரலாம்.