வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள மங்குஸ்தான் பழம் !!

Mangostan
Sasikala|
மங்குஸ்தானில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதிக நீர்சத்து நிறைந்த இந்த ஆன்டிஆக்சிடண்ட்கள் மற்றும் வைட்டமின் சி காய்ச்சலுக்கு எதிராக செயல்படுவதுடன் தொற்றுநோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. 

வைட்டமின் சி அதிகமுள்ள பழங்கள் சாப்பிடுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். கர்ப்ப காலத்தில் இந்த பழம் சாப்பிடுவது பெண்களின் கர்ப்பப்பையை வலுப்படுத்தும்.
 
இரத்த ஓட்டம் மங்குஸ்தான் உடலில் இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது மேலும் அனிமியா ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. இது இரத்த  ஓட்டத்தை அதிகரிப்பதுடன், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.
 
கொலஸ்ட்ராலை குறைக்கிறது மங்குஸ்தானில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க பயன்படுகிறது. இது உடலில் உள்ள  ட்ரைக்ளிசரைட்ஸின் அளவை சீராக்க உதவுவதுடன் இதயத்தின் சீரான இயக்கத்திற்கும் உதவுகிறது
 
காசநோய் மங்குஸ்தானில் அதிகளவு ஆன்டிபாக்டீரியால் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படக்கூடிய பண்புகள் உள்ளது. மேலும் இது பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. 
 
காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை தடுப்பதில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது.
 
புற்றுநோய் இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் புற்றுநோய் மற்றும் இதய கோளாறுகளை குணப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது சக்திவாய்ந்த மற்றும் பயனுள்ள ஆன்டிஆக்சிடன்ட் ஆகும் இது செல்லுலர் ரெஸ்ட் எனப்படும் இதய அழுத்தத்தை ஏற்படுத்தும் மருத்துவக்கோளாறை சரிசெய்ய உதவுகிறது.
 
இரத்த அழுத்தம் மங்குஸ்தானில் அதிகளவு காப்பர், மக்னீசியம் மற்றும் மாங்கனீசு அதிகம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் மாரடைப்பு மற்றும் கரோனரி இதய நோய்கள் போன்றவற்றிக்கு எதிராக செய்லபட உதவுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :