வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (09:16 IST)

ஆரோக்கிய அம்சங்களை அள்ளி தரும் பூசணி விதைகள்!

Pumpkin seeds
பூசணி விதைகள் பல்வேறு ஊட்டச்சத்துகளையும், மருத்துவ குணத்தையும் கொண்டவை. ஆனால் பெரும்பாலும் இவை உணவில் பயன்படுத்தப்படுவதில்லை. பூசணி விதையின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.


  • பூசணி விதையில் நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின் இ நிறைவாக உள்ளது. பூசணி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் அன்றாடம் தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.
  • பூசணி விதையில் உள்ள மக்னீசியம் சத்து உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை பாதுகாக்கிறது.
  • பூசணி விதைகளை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
  • பூசணி விதையில் உள்ள ஒமேகா 3 இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். சர்க்கரை உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் பூசணி விதைகள் உதவுகின்றன.
  • பூசணி விதைகளை சாப்பிடுவதால் செரோட்டின் ஹார்மோன் சுரக்க உதவுகிறது. இதனால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
  • பூசணி விதைகளை நெய்யில் வறுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் வலி குறையும்.
  • பூசணி விதைகள் சாப்பிடுவதால் ஆண்களின் ஹார்மோன் செயல்பாடு மேம்படுகிறது.