ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெள்ளரிக்காயை உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்...!!

வெள்ளரி நம் உடலுக்கும் தோலுக்கும் ஏராளமான ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ளது. நறுக்கிய வெள்ளரித்துண்டு வாய் துர்நாற்றத்தை குறைத்து, வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாவைக் கொல்லும் ஆற்றல் கொண்டது.

வெள்ளரிக்காய் நம் கண்களைப் பாதுகாக்கும், மாலைக்கண் நோயை, முதுமை அடைவதால் ஏற்படும் பார்வை குறைபாடுகளைத் தடுக்கும். மேலும் இது புற்றுநோயைத் தடுக்கும், முகப்பரு ஏற்படுவதைக் குறைக்கும்.
 
வெள்ளரிக்காயில் நார்ச்சத்து உணவு நல்ல குடல் செயல்பாட்டுக்கு உதவுகிறது. மேலும் இது ரத்த சர்க்கரை அளவுகளை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது, கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைத்து எடையை குறைக்க உதவுகிறது.
 
வெள்ளரிக்காய் வெப்பமான கோடை காலங்களில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதால், மிக வெப்பமான பகுதிகளில் வாழும் மக்கள் இதை  அதிகமாக உண்கிறார்கள். இதை நம் அன்றாட உணவின் ஒரு பகுதியாக உண்பதற்கான அத்தனை ஆரோக்கியப் பலன்களையும் கொண்டுள்ளது. 
 
வெள்ளரியில் உள்ள கூறுகள் ஆரோக்கியமான இதயத்தைத் பராமரிக்க முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் ரத்த அழுத்தத்தை நிலையான அளவில் வைத்திருக்கிறது. நமக்கு உண்டாகக்கூடிய நோய்களிலிருந்து தடுக்கும் அழற்சி நீக்க பண்புகளும் இதில் உள்ளன. வெள்ளிரி முக்கியமாக, நோய் எதிர்ப்பை  அதிகரித்து இதய நோய்கள் வரும் ஆபத்தைக் குறைக்கிறது.
 
வெப்பம் நிறைந்த கோடைக்காலம் மிக வேகமாக நம் உடல் நீரை வற்றச்செய்து அடிக்கடி தண்ணீர் தாகம் வாட்டும். இதற்கு புதிய வெள்ளரியை நறுக்கி சில துண்டுகளை மென்று கொண்டிருந்தால், போதும்.
 
வெள்ளரி ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவு நோய் உண்டாகும் ஆபத்தைக் குறைக்கிறது. டைப் 2 நீரிழிவு அளவு குறைக்க உதவும். மேலும் உயரளவு ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் உயர் நார்ச்சத்தைக் கொண்டுள்ளது.