1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (12:42 IST)

முடி கொட்டும் பிரச்சினைக்கு நிவாரணம் தரும் கொய்யா இலை !!

Guava Leaf
கொய்யா இலையில் மருத்துவ குணமும், பலவித சத்துக்களும் உள்ளது. கொய்யா இலையில் வைட்டமின் சி, நீர்சத்து, நார்சத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் போன்ற பல தாதுக்கள் நிரம்பி உள்ளது.


முடி கொட்டும் பிரச்சினையை நிறுத்தி வழுக்கை ஏற்படாமல் தடுக்க, ஒரு கைப்பிடி கொய்யா இலை 1 லிட்டர் தண்ணீர் இருந்தாலே போதும்.

செய்முறை: முதலில் 1 லிட்டர் நீரில் கொய்யா இலையை போடவும். 30 நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் இந்த நீரை ஆறவிட்டு தலையில் தடவி கொள்ளவும். இதே போன்று வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் முடி உதிர்வது நின்று விடும்.

வெள்ளை முடிக்கு தீர்வு பெற, தேவையான பொருட்கள்: கொய்யா இலை 5 கறிவேப்பில்லை இலை 20 நெல்லி 1 தேங்காய் எண்ணெய் 200 மி.லி.

செய்முறை: முதலில் தேங்காய் எண்ணெய்யை வாணலில் ஊற்றி அதில் கருவேப்பிலை, கொய்யா இலை, நறுக்கிய நெல்லிக்காய் முதலியவற்றை சேர்க்கவும். மிதமான சூட்டில் இவை முழுவதுமாக வறுபடும் வரை வதக்கி கொண்டு, அடுப்பை அணைத்து விடவும். இந்த கலவை குளிர்ந்த பிறகு இதனை வடிகட்டி வாரத்திற்கு 1 முறை இந்த எண்ணெய்யை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் வெள்ளை முடிகள் காணாமல் போய் விடும்.
பொடுகு

முடியின் பிரச்சினைகளை தீர்க்க முதலில் பொடுகை ஒழிக்க வேண்டும். இதற்கு தேவையான பொருட்கள்.. கொய்யா இலை 1 கைப்பிடி ஆலிவ் எண்ணெய் 3 ஸ்பூன்.

செய்முறை: கொய்யா இலையை சிறிது சிறிதாக நறுக்கி கொண்டு அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவவும். 30 நிமிடத்திற்கு பின்னர் சிறிதளவு சிகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் பொடுகு நீங்கி, முடி உதிர்வும் நின்று விடும்.