ஞாயிறு, 8 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (12:21 IST)

மருதம்பட்டை பொடியின் அற்புத மருத்துவ குணங்கள் !!

Marutham Pattai
இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்புக்கு காரணம். இரத்தக் குழாயில் கொழுப்பு சேராமல், அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் சக்தி மருதம்பட்டைப் பொடிக்கு உள்ளது.


உடலில் எந்த இடத்தில் காயம் ஏற்பட்டாலும், முதலில் காயம்பட்ட இடத்தை சுத்தமான நீரில் கழுவி விட்டு, அதன் மீது மருதம் பட்டை பொடியை வைத்து கட்டு போடவும். இதனால் ரத்த ஒழுக்கு நிற்பதுடன் காயமும் விரைவாக குணம் அடையும்.

வாய் புண், தொண்டை கமறல் போன்றவற்றால் அவதிப்படுவோர் ஒரு ஸ்பூன் மருதம் பட்டை பொடியை இரண்டு கப் நீரில் கலந்து 10 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு, அந்த நீரை வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கமறல் நீங்கும். வாய்ப்புண் குணமாகும்.

மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி தீர மருதம் பட்டை, வேப்பம் பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு பெருங்காயம் சேர்த்து காலை மற்றும் மாலை மோருடன் கலந்து பருகி வர, மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி தீரும்.

இரத்த கசிவு, வீக்கம், வலி போன்ற பிரச்சினை உள்ளவர்கள் மருதம் பட்டை பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பல் தேய்க்க வேண்டும். இதேபோல் ஒரு வாரம் செய்து வந்தால் பற்கள் சுத்தமாவதுடன், பல் ஈறு தொடர்பான பிரச்சினைகளும் மறையும்.

உணவு ஒவ்வாமை, அஜீரணம் போன்ற காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படும். அதை சரி செய்ய ஒரு டம்ளர் மோரில் 5 கிராம் மருதம் பட்டை பொடியை கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு தொந்தரவும், செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

நன்கு உலர்ந்த மருதம்பட்டையை மாவாக அரைத்து, அதை 5 கிராம் அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா தொந்தரவுகள் குறையும். மேலும் அனைத்து விதமான மூலிகைகள் அதன் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.