ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2016 (05:52 IST)

கை, கால், தலை என 13 துண்டாக வெட்டி பெண் படுகொலை!

இளம்பெண் ஒருவர் கை, கால்கள், தலை என 13 துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மேற்கு பான்வல் பகுதியில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, கேரேஜ் ஹண்டா காலனி பகுதியில் உள்ள ஒரு புதருக்குள் 13 துண்டாக வெட்டி 3 பிளாஸ்டிக் பைகளில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த பிளாஸ்டிக் பைகளில் கை, கால்கள், தலை என தனித்தனியாக வெட்டப்பட்டு இருந்தது. இதனையடுத்து உடலை கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”இந்தப் பகுதியில் இளம்பெண் யாரேனும் காணாமல் போயிருக்கிறார்களா என்று அருகில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படும்” என்றார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.