1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 9 டிசம்பர் 2017 (13:11 IST)

சட்டசபை வளாகத்திற்குள் மதுக்கடை திறக்க வேண்டும்; எம்.எல்.ஏ க்களின் கோரிக்கை

ஜார்கண்ட் சட்டசபை வளாகத்திற்குள் மதுக்கடை அமைக்க வேண்டும் என அம்மாநில  எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் அம்மாநிலத்தின் முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் மாநிலத்தில் உள்ள மது கடைகளுக்கான உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது. பின் அனுமதிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே மது பானங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அரசு கடைகளும் ஒரு சில இடங்களில் மட்டுமே இருப்பதால் மது வாங்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டி உள்ளதாகவும், இதனால் தேவையற்ற பிரச்னைகளும் கைகலப்புகளும் உருவாகுவதாகவும் அம்மாநில எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
 
எனவே, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சட்டசபை வளாகத்திற்குள் மதுபான கடையை திறக்க வேண்டும் எனவும் வரும் 12-ம் தேதிசட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும் போது இதுகுறித்து முதல்வர் ரகுபர் தாஸிடம் முறையிடப்போவதாகவும் எம்.எல்.ஏக்கள் கூறியுள்ளனர். இந்த கோரிக்கைக்கு முக்கிய எதிர்கட்சியான ஜார்கண்ட் முகதி மோர்ச்சா ஆதரவளித்துள்ளது.