1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2017 (06:45 IST)

ரூ.787 கோடி சுற்றுச்சூழல் வரித்தொகையை செலவு செய்யாமல் என்ன செய்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்?

தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ள நிலையில் சுற்றுச்சூழல் செஸ் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட 787 கோடி நிதியைக் கூட செலவழிக்காமல் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு கையிருப்பு வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 


டெல்லி மக்களிடன் சுற்றுச்சூழல் வரி என்ற பெயரில் கடந்த 2015-ம் ஆண்டு 50 கோடியும், 2016-ம் ஆண்டு 387 கோடி ரூபாயும், 2017ஆம் ஆண்டு ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை ரூ.787 கோடியும் வசூலிக்கப்பட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆனால் 2016-ம் ஆண்டு  வெறும் ரு.93 லட்சம் மட்டுமே செலவழிக்கப்பட்டதாக டெல்லி அரசு கூறியுள்ள நிலையில் இந்த ஆண்டு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை அளிக்கவே இல்லை. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி இந்த பணத்தை சுற்றுச்சூழல் நலனுக்காக செலவு செய்யாமல் கையிருப்பு வைத்திருப்பதாக திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மாசு குறைபாட்டால் டெல்லியே ஆபத்தில் உள்ள நிலையில் இதற்காக வசூலிக்கப்பட்ட தொகையை ஏன் செலவு செய்யவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.