கோதுமை ஏற்றுமதியை தடை செய்து மத்திய அரசு உத்தரவு
கோதுமை ஏற்றுமதியை தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கோதுமை விலை ஏறிக்கொண்டு வருவதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
இதனை அடுத்து இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்
இந்த நிலையில் கோதுமை ஏற்றுமதி தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் பிற நாடுகளின் கோரிக்கைக்கு ஏற்ப அங்கு கோதுமை தேவை இருந்தால் மத்திய அரசின் அனுமதியோடு ஏற்றுமதி செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது