ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (08:03 IST)

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: இன்னும் சில நிமிடங்களில் முதல் முடிவு

17வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 544 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
 
முதலில் அனைத்து தொகுதிகளிலும் பதிவான தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றது. இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்
 
தமிழகத்தில் 38 தொகுதிகளிலும், புதுச்சேரியின் ஒரு தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது. முதல் முன்னிலை நிலவரம் இன்னும் ஒருசில நொடிகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது