ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 31 ஜூலை 2014 (13:03 IST)

காதலித்த தங்கை கௌரவ கொலை: துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அண்ணன்

உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் தங்கை, ஒருவரை காதலித்ததால் கௌரவ கொலை என்று அவரது அண்ணன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி சர்மா கூறுகையில், “முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அர்சாத். இவரது தங்கை ஒருவரை காதலித்ததாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அர்சாத் தனது தங்கை என்று பார்க்காமல் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இளம் பெண்ணின் உடலைக் கைப்பிற்றிய காவல் துறையினர், உடலை பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தலைமறைவாகியுள்ள அர்சாபத்தை தேடிவருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் பல்வேறு கற்பழிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், தன் செந்தத் தங்கையை உடன்பிறந்த அண்ணன் கௌரவ கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.