ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (07:23 IST)

உலகின் முதல் மருத்துவமனை ரயில்: மும்பையில் இயக்கம்

உலகின் அனைத்து வசதிகளும் கொண்ட முதல் மருத்துவமனை ரயில் நேற்று மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. இந்திய ரயில்வேயின் மைல்கல் என்று கூறப்படும் இந்த ரயிலில் ஏழு கோச்கள் உள்ளன. 
 
 
கிராமப்புற மக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே அனைத்துவித மருத்துவ சிகிச்சை பெறும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனை ரயிலில் அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்பட ஒரு நவீன மருத்துவமனையில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளன.
 
 
ஃலைப்லைன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயங்கும் இந்த ரயிலில் இரண்டு ஆபரேசன் தியேட்டர், ஐந்து ஆபரேஷன் டேபிள் உள்பட உலகின் மிக நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. இந்த ரயில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நிற்கும் போது அந்த பகுதியில் உள்ளவர்கள் தங்களுக்கு இருக்கும் நோயிற்கு சிகிச்சை பெறு கொள்ளலாம். கண் பார்வை, காது கோளாறு, பல் சிகிச்சை உள்பட அனைத்து வகை சிகிச்சைகளும் பெற்று கொள்ளலாம். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நிற்கும்போது சுமார் 8000 பேர் வரை சிகிச்சை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
மேலும் மார்பக புற்றுநோய் சோதனை, சர்க்கரை நோய் சோதனை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, புற்றுநோய் உள்பட அனைத்து வகை நோய்களுக்கும் இந்த ரயிலில் சிகிச்சை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் இன்னும் அதிகளவு இதேபோன்று மருத்துவமனை ரயில்கள் இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது