வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 8 மே 2018 (08:07 IST)

காவிரி வழக்கு இன்று மீண்டும் விசாரணை! கர்நாடகத்திற்கு கண்டனம் தெரிவிக்குமா சுப்ரீம் கோர்ட்?

காவிரி நதிநீர் வழக்கில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை இன்று மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
 
மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்றும், அவ்வாறு திறந்துவிடாவிட்டால் கடும் விளைவுகளை கர்நாடகா சந்திக்க நேரிடும் என்றும் சுப்ரீம் கோர்ட் எச்சரித்திருந்தது. ஆனால் நேற்று கர்நாடகா அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழல் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இன்றைய விசாரணையின்போது கர்நாடகா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் மத்திய அரசின் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் காவிரி குறித்த சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை செயல்படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இன்றைய விசாரணையில் என்ன உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்