1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 மே 2018 (13:09 IST)

காவிரி விவகாரம் ; நாளை தீர்ப்பு : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் கடந்த 14ந்தேதி காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு முடிவு ஏற்படும் என காத்திருந்த நிலையில் மத்திய அரசு செயல் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ததது.

 
இந்நிலையில் காவிரி தொடர்பான வழக்கு கடந்த 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது, தமிழக அரசின் சார்பில் 2 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் எனவும்,காவிரி மேலாண்மை வாரியம் தலைமயகத்தை கர்நாடகத்தில் அமைக்காமல் டெல்லியில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. மேலும், காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை வைத்தது. ஆனால், உச்சநீதிமன்றம் அதை ஏற்கவில்லை.
 
மேலும் காவிரி அமைப்பிற்கு வாரியம் என்று பெயரை வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என மத்திய அரசும், கர்நாடக அரசும் தெரிவித்தது. அதேபோல் நீர் பங்கீடு தொடர்பான முடிவை வாரியம் தான் எடுக்கும் என்றும், இதில் மத்திய அரசு தலையிட உரிமை இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் காவிரியில் அணை கட்ட கர்நாடகத்திற்கோ, தமிழகத்திற்கோ உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
 
கர்நாடக அரசியலில் குழப்பம் நிலவி வருவதால், காவிரி விவகாரத்தை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்க கர்நாடக அரசு மனு அளித்தது. ஆனால் இதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். இதனையடுத்து மத்திய அரசின் வரைவுத்திட்டத்தில் 3 மாற்றங்களை சீர் செய்யக்கோரியதுடன், வழக்கின் மீதான விசாரணையை இன்று ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், காவிரி அமைப்புக்கு ஆணையம் என பெயர் மாற்றி வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த திருத்தப்பட்ட வரைவுத் தீட்டம் மீதான வழக்கில் தீர்ப்பு நாளை வழங்கப்படும். ஒருவேளை நாளை வழங்கப்படாமல் போனால், வருகிற 22, 23ம் தேதிகளில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.