திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 13 நவம்பர் 2020 (11:01 IST)

கொரோனாவில் இருந்து குணமானார் ஸ்மிருதி இராணி!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது முழுவதும் குணமாகியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது சொந்த தொகுதியான அமேதியில் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார் ஸ்மிருதி ராணி. அதையடுத்து அவருக்கு மத்திய அமைச்சரவையில் மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி பதவி வழங்கப்பட்டது.

இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த மாதம் 28-ந்தேதி தெரியவந்தது. அதையடுத்து வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் இப்போது அவர் கொரோனாவில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளார்.