1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (13:48 IST)

சாய்பாபா இட சர்ச்சை: போராட்டத்தில் குதித்த மக்கள்!

சாய்பாபா பிறந்த இடம் குறித்து மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை திரும்ப பெற கோரி ஷீர்டியில் மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் பாத்ரியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்ற மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பாத்ரி நகர மேம்பாட்டுக்காகவும், கோவில் விரிவாக்க மேலாண்மை பணிகளுக்காகவும் 100 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தார். சாய்பாபா பிறந்த இடமாக பாத்ரி அறியப்படுவதாக கூறப்படும் நிலையில் ஷீர்டி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சாய்பாபா சமாதி அமைந்துள்ள ஷீர்டியில் அவருக்காக கோவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது வரை அதுவே சாய்பாபாவின் முக்கியமான புனித தலமாக அறியப்படுகிறது. இந்நிலையில் ஷீர்டியை ஒதுக்கும் முயற்சியில் முதல்வர் ஈடுபடுவதாக கூறி ஷீர்டி கோவில் அருகே கடை நடத்தி வரும் மக்கள் மொத்தமாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாய்பாபா கோவிலுக்கு இன்று அதிகமான மக்கள் வருகை புரிந்துள்ள நிலையில் கடைகள் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.