1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (17:44 IST)

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சசி தரூர் போட்டியிடுவது உறுதியா?

Sasi Tharoor
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் போட்டியிட உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ள இடத்தில் இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார் என்றும் அவருக்கு சோனியா காந்தி ஆதரவு அளிப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக சசிதரூர் 30ஆம் தேதி மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிதரூர் வேட்புமனு தாக்கல் செய்தால் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்படும். இருப்பினும் சோனியா காந்தியின் ஆதரவாளரை அவர் தோற்கடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்