வெள்ளி, 13 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 டிசம்பர் 2025 (15:38 IST)

'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம், ஆனால் கட்டாயம் அல்ல: மத்திய அமைச்சர் சிந்தியா விளக்கம்!

'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம், ஆனால் கட்டாயம் அல்ல: மத்திய அமைச்சர் சிந்தியா விளக்கம்!
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று உத்தரவிட்டதால், இது தனிநபர் தனியுரிமையை மீறுவதாகக் கூறி பெரும் அரசியல் சர்ச்சை வெடித்தது.
 
இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்றத்திற்கு வெளியே விளக்கம் அளித்தார்.
 
"சஞ்சார் சாத்தி செயலியை மொபைலில் நிறுவுவது கட்டாயம் என்றாலும் அதை செயல்படுத்துவது விருப்பத்திற்குட்பட்டது என்றும், ஒருவேளை உங்களுக்கு தேவையில்லை என்றால், நீங்கள் அதை நீக்கிவிடலாம் என்றும், இது எந்த வகையிலும் உளவு பார்ப்பதில்லை அல்லது அழைப்புகளை கண்காணிப்பதில்லை," என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
 
இணைய மோசடிகளை தடுக்கும் கருவியை மக்களுக்குக் கொண்டு சேர்க்கவே இந்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். முன்னதாக, புதிய சாதனங்களில் செயலியை முன்கூட்டியே நிறுவ DoT உத்தரவிட்டிருந்தது.
 
எனினும், எதிர்க்கட்சிகள் இந்த செயலியை உளவு பார்க்கும் செயலி என்றும், "பெகாசஸ் பிளஸ் பிளஸ்" போன்றது என்றும் விமர்சித்துள்ளன. திருடப்பட்ட போன்களை தடுப்பது, சந்தேகத்திற்கிடமான மோசடிகளை புகாரளிப்பது போன்ற வசதிகளை வழங்குவதற்காகவே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran