முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்: சிபிஐ அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் மம்தா சவால்!

mamtha
முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்: சிபிஐ அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் மம்தா சவால்!
siva| Last Updated: திங்கள், 17 மே 2021 (12:08 IST)
முடிந்தால் என்னை கைது செய்ய பாருங்கள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிபிஐ அதிகாரிகளுக்கு சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மத்திய அரசுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிகாரிக்ளுக்கு சவால் விடுத்துள்ளார்

சாரதா மோசடி தொடர்பாக மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஃபிர்ஹத் என்பவரிடம் சிபிஐ விசாரிக்க முடிவு செய்திருப்பதற்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள் என சிபிஐ அலுவலம் சென்று அதிகாரிகளுக்கு மம்தா சவால் விடுத்துள்ளார். இந்த சவால் காரணமாக சிபிஐ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்


இதில் மேலும் படிக்கவும் :