1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 ஜனவரி 2021 (16:44 IST)

திரும்ப பெறப்படுகிறதா பழைய ரூ.10, ரூ.100 நோட்டுகள்?? – ரிசர்வ் வங்கி விளக்கம்!

பயன்பாட்டில் உள்ள பழைய ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறுவதாக வெளியான தகவல் குறித்து ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பழைய ரூ.10 மற்றும் ரூ.100 பணத்தாள்களுடனே புதிய நீல வண்ண 100 ரூபாய் நோட்டும், ப்ரவுன் வண்ண 10 ரூபாய் தாளும் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் பண மதிப்பிழப்பிற்கு முன்னதாக புழக்கத்தில் இருந்து வந்த ரூ.10 மற்றும் ரூ.100 ரூபாய் தாள்களை ரிசர்வ் வங்கி திரும்ப பெறுவதாகவும், சில மாதங்களில் அதன் புழக்கம் இல்லாமல் போகும் என்றும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி பழைய பணத்தாள்களை திரும்ப பெறுவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. மக்கள் அந்த தகவலை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ள்ளது.