1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rajya Sabha Polls: Deadlock in Bihar, Odisha, and Haryana Amid Cross-Voting Fears

3 மாநிலங்களில் இன்று ராஜ்யசபா தேர்தல்.. பெரும் இழுபறி.. ஒளித்து வைக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள்.. திடீரென மனம் மாறிய சுயேட்சை எம்.எல்.ஏ

ராஜ்யசபா தேர்தல்
இந்தியாவின் ஏழு மாநிலங்களில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் 26 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர்களும் அடங்குவர். இருப்பினும் பீகார், ஒடிசா மற்றும் ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களில் கடும் இழுபறி நீடிக்கிறது. 
 
பீகாரில் ஐந்தாவது இடத்திற்காக என்டிஏ வேட்பாளர் உபேந்திர குஷ்வாஹா மற்றும் மகாகத்பந்தன் வேட்பாளர் ஏ.டி. சிங் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆர்ஜேடி கட்சிக்கு ஓட்டுப்போட ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு தெரிவித்துள்ளது.
 
ஒடிசாவில் பாஜக மற்றும் பிஜேடி தலா இரண்டு இடங்களை வெல்லும் சூழல் இருந்தாலும், 5வது இடத்திற்குப் போட்டி நிலவுகிறது. பாஜக ஆதரவு பெற்ற திலீப் ராய் வெற்றிபெற கூடுதல் வாக்குகள் தேவைப்படுகின்றன. 
 
ஹரியானாவில் காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறாமல் தடுக்க அவர்களை இமாச்சல பிரதேசத்திற்கு அழைத்து சென்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர் சதீஷ் நந்தல் களமிறங்கியதால் அங்கு அரசியல் கணக்குகள் மாறியுள்ளன. 
 
இந்த மூன்று மாநிலங்களிலும் இன்று நடைபெறவுள்ள வாக்குப்பதிவில் யாரும் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
திடீரென செயலிழந்த இந்தியாவின் முக்கிய செயற்கைக்கோள்.. 8,700 ரயில்கள் நிலை என்ன?