திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (17:51 IST)

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம்: புதிய தேர்தல் தேதி அறிவிப்பு..!

Election Commission
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட நிலையில் அதில் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் தேதி மட்டும் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி மிசோரத்தில் நவம்பர் 7ம் தேதியும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17ம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23ம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதியும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சத்தீஸ்கரில் மட்டும் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் இந்த 5 மாநில தேர்தல்  முடிவுகள் டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 23ம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தேதி நவம்பர் 25 என மாற்றப்பட்டுள்ளது.

Edited by Mahendran