1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rajasthan Constable Dismissed Day After Wedding for Dancing with Wanted Criminals

திருமணமான அடுத்த நாளே வேலை காலி.. போலீஸ் கான்ஸ்டபிள் அதிர்ச்சி..!

ராஜஸ்தான் காவலர்
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காவலர் ஒருவர், அடுத்த நாளே தனது வேலையை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அசோக் பிஷ்னோய் என்ற காவலரின் திருமணம் சமீபத்தில் மிக ஆடம்பரமாக நடைபெற்றது. இந்த விழாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர். இருப்பினும், காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் சிலரும் இந்த திருமண விழாவில் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
மணமகனான அசோக் விஷ்னோய், அந்த குற்றவாளிகளுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவியது. ஒரு காவலராக இருந்து கொண்டு, சட்டத்திற்கு புறம்பான நபர்களுடன் தொடர்பு வைத்திருந்தது மற்றும் அவர்களுடன் பொதுவெளியில் ஆட்டம் போட்டது காவல்துறை கண்ணியத்திற்கு எதிரானது என கருதப்பட்டது. 
 
இதனை தொடர்ந்து, விசாரணை நடத்திய உயர்மட்ட அதிகாரிகள், திருமணமான அடுத்த நாளே அசோக் பிஷ்னோயை பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டனர். மகிழ்ச்சியுடன் மணவாழ்க்கையை தொடங்க வேண்டிய தருணத்தில், வேலையை இழந்தது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
நான் உயிரோட இருக்கணும்!. அதனால் மோடியை ஆதரிக்கிறேன்!.. டாப்சி ராக்ஸ்!...