வாலிபரை அடித்து கொன்ற போலீஸை தாக்கிய பொதுமக்கள்

Abimukatheesh| Last Updated: செவ்வாய், 26 ஜூலை 2016 (12:03 IST)
குஜராத் மாநிலத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த வாலிபரை காவல்துறை உஅதவி ஆய்வாளர் அடித்துக் கொன்றதால், பொதுமக்கள் அவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
குஜராத்தின் சூரத் நகரில் வெட் சாலையில் இளைஞர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் வி.எஸ் படேல், இளைஞர்களை கடுமையாக தாக்கி உள்ளார்.
 
இதில் மகேந்திரா என்கிற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காவல்துறை உதவி ஆய்வாளரை சூழ்ந்து கொண்டு கடுமையாகத் தாக்கினர். இதில் அந்த காவல்துறை அதிகாரி படுகாயம் அடைந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
 
 


இதில் மேலும் படிக்கவும் :