மாத இறுதியில் பட்ஜெட் கூட்ட தொடர்; அனைத்து கட்சி கூட்டம்! – பிரதமர் அழைப்பு!

Prasanth Karthick| Last Modified புதன், 20 ஜனவரி 2021 (10:49 IST)
மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட் கூட்ட தொடர் மற்றும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா காரணமாக நாடு கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் ஜனவரி 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அனைத்து கட்சி கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும். அதற்கு முன்பாக ஜனவரி 29ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்க உள்ளது.

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில் அதை தொடர்ந்து முதல் கட்ட கூட்டம் பிப்ரவரி 15 வரையிலும், இரண்டாம் கட்ட கூட்டம் மார்ச் 1 வரையிலும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள உள்ள எம்.பிக்கள் அனைவரும் 27,28 தேதிகளில் பாராளுமன்ற வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :