1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Oracle Lays Off 12,000 Employees in India; Another Round of Job Cuts Expected Soon

Oracle அதிரடி: இந்தியாவில் மட்டும் 12,000 ஊழியர்கள் பணிநீக்கம்; மீண்டும் ஒரு சுற்றுக்கு வாய்ப்பு!

ஆரக்கிள் பணிநீக்கம்
பிரபல அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Oracle, இந்தியாவில் சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
உலகளவில் சுமார் 30,000 ஊழியர்களை அந்நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகளை சீரமைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஒரு வருட பணிக்காலத்திற்கு 15 நாட்கள் ஊதியம், ஒரு மாத நோட்டீஸ் கால ஊதியம், விடுப்பு பணமாக்கல் மற்றும் கிராஜுவிட்டி ஆகியவற்றை வழங்க நிறுவனம் முன்வந்துள்ளது. மேலும், சுமுகமாக பதவி விலகும் ஊழியர்களுக்கு கூடுதலாக இரண்டு மாத ஊதியம் 'டாப்-அப்' தொகையாக வழங்கப்படும் என தெரிகிறது. 
 
இந்தியாவில் ஆரக்கிள் நிறுவனத்தில் மொத்தம் 30,000 பேர் பணியாற்றி வந்த நிலையில், தற்போது பெரும் பகுதி ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஒரு மாதத்திற்குள் மீண்டும் ஒரு கட்ட பணிநீக்கம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
 
பணி நேர கூடுதல் சுமை மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் இந்த அதிரடி முடிவுக்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன.
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. 33 கேள்விகள் கேட்கப்படும்.. சாதி வாரி கணக்கெடுப்பும் உண்டா?