ஒட்டுமொத்த எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு.. வெறிச்சோடியது பாராளுமன்றம்..!
இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடியதும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்ததை அடுத்து, பாராளுமன்றம் வெறிச்சோடி கிடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் விவகாரம், அதானி விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் வலியுறுத்தினர். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி வழங்காததை அடுத்து, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிக் எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்றம் இன்னும் ஒரு நாள் கூட முழுமையாக செயல்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் இன்று மீண்டும் கூடிய நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவையின் போன்று ராஜ்யசபாவிலும் தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்வதற்கு முன் வைகோ பேசிய போது, "புயல் மழை காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே உடனடியாக கணக்கீடு செய்து நிவாரண உதவி வழங்க வேண்டும்," என்று கேட்டுக்கொண்டதாக கூறினார்.
Edited by Siva