திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 மார்ச் 2024 (11:25 IST)

ஜன்னலை கதவை திறந்து வெச்சுக்கிட்டு கசமுசா பண்றாங்க! எதிர்வீட்டு தம்பதிகள் மேல் போலீஸில் புகார் அளித்த பெண்!

Couples
பெங்களூரில் இளம் தம்பதிகள் ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு சல்லாபம் செய்து தொந்தரவு அளிப்பதாக பக்கத்துவீட்டு பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.



எதிர்வீடு, பக்கத்துவீடு சண்டைகள் இல்லாத ஊர்களே கிடையாது எனலாம். ஆடு, கோழி வேலி தாண்டுவது தொடங்கி, மர இலைகள் பக்கத்து காம்பவுண்டில் விழுவது வரை பல்வேறு காரணங்களுக்காக பக்கத்து வீட்டு சண்டைகள் காவல் நிலையம் வரை செல்லும் சம்பவங்களும் தொடர் கதையாக உள்ளன.

பெங்களூர் கிரிநகரில் ஒரு பெண்மணி நூதனமான புகார் ஒன்றை காவல்நிலையத்தில் அளித்துள்ளார். அந்த 44 வயது பெண்மணி வசித்து வரும் பிடிஏ லே அவுட் பகுதியில் பல வீடுகள் உள்ளது. பெண்மணியின் வீட்டின் வாசல் பக்கமாக முன்னால் இருக்கும் வீட்டின் படுக்கையறை, ஜன்னல் பகுதி உள்ளது.


இந்நிலையில் அங்கு வசித்து வரும் இளம் தம்பதிகள் தினமும் ஜன்னல் கதவை திறந்து வைத்துக் கொண்டே உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதை காண முடியாமல் அந்த பெண்மணி அந்த தம்பதியரை ஜன்னலை மூடி வைத்துக் கொண்டு இதையெல்லாம் செய்யுங்கள் என கூறியுள்ளார். ஆனாலும் அந்த இளம் தம்பதி கேட்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு எழுந்துள்ளது.

பொறுத்தப்பார்த்த பெண்மணி இறுதியாக இதுகுறித்து கிரிநகர் காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் இந்த புகாரை விசாரணை செய்து வருகின்றனர்.

Edit by Prasanth.K