திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 21 ஏப்ரல் 2022 (08:35 IST)

ஓலா, உபேர் கட்டணங்கள் 14 சதவிகிதம் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Ola Uber
ஓலா மற்றும் உபேர் கட்டணங்கள் 14 சதவீதம் உயர்த்தப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்தது என்பதும் பெட்ரோல் விலை 110 ரூபாயும் டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள் கட்டணங்களை 14 சதவீதம் உயர்த்தி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை உயர்த்த பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன 
 
ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது ஓலா மற்றும் உபேர் ஆகிய போக்குவரத்து சேவை நிறுவனங்களின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது