சனி, 23 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (13:23 IST)

அடுத்த நிலநடுக்கம் இந்தியாவில் தான்.. ‘துருக்கி’ பூகம்பத்தை கணித்த விஞ்ஞானி எச்சரிக்கை!

earthquake
துருக்கி நிலநடுக்கத்தை மூன்று நாட்களுக்கு முன்பே சரியாக கணித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த விஞ்ஞானி அடுத்த நிலநடுக்கம் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தான் என எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
நெதர்லாந்தை சேர்ந்த புவியில் ஆராய்ச்சி விஞ்ஞானி பிராங்க் ஹுகர்பீட்ஸ் என்பவர் துருக்கி சிரியா ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் மூன்று நாட்களுக்கு முன்பே பதிவு செய்திருந்தார். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில் தற்போது தான் அவருடைய டிவிட் வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக  பிராங்க் ஹுகர்பீட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையால் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்படும் நிலநடுக்கம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பாகிஸ்தான் இந்தியாவை கடந்து இந்திய பெருங்கடலில் அந்த நிலநடுக்கம் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran