வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2025 (11:13 IST)

குறி வெச்சா இரை விழணும்.. கப்பலை தாக்கும் புதிய ஏவுகணை சோதனை! - இந்தியா சாதனை!

Naval Missile Test India

கடலில் கப்பலை எதிர்க்கும் ஏவுகணை சோதனையை மேற்கொண்ட இந்தியா அதில் வெற்றிக் கண்டுள்ளது.

 

இந்திய நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வெளிநாடுகளில் இருந்து போர் தளவாடங்கள் வாங்கப்படுவது ஒருபக்கம் இருக்க, இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் (DRDO) பல புதிய ஏவுகணைகளை சொந்தமாக தயாரித்து வெற்றிகரமாக சோதித்தும் வருகிறது.

 

 

அந்த வகையில் கடல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் கடலில் கப்பல்களை எதிர்க்கும் ஏவுகணையை டிஆர்டிஓ உருவாக்கியது. இந்த ஏவுகணை Naval Anti Ship Missile Short Range (NASM-SR) என அழைக்கப்படுகிறது. இது அதன் அதிகபட்ச திறனில் குறிப்பிட்ட இலக்கிற்குள் ஒரு சிறிய கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஏவுகணையை ஏவிய பிறகும் கூட அதன் இலக்கை மாற்றிக் கொள்ள முடியும் வகையில் இருவழி டேட்டாலிங்க் சிஸ்டம் உள்ளது. இந்த ஏவுகணை சோதனை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில் விமானத்தில் இருந்து ஏவப்பட்டு குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாக டிஆர்டிஓ தெரிவித்து, ஏவுகணை சோதனை வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். கடல்வழி பாதுகாப்பில் இந்த ஏவுகணை சோதனை ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K