1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

மம்தா பானர்ஜி ரோஹிங்கியாக்களின் அத்தை: நந்திகிராம் பாஜக வேட்பாளர்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மண்ணின் மைந்தர் அல்ல என்றும் அவர்களின் ஊடுருவி வந்த ரோஹிங்கியாக்களின்  அத்தை என்றும் நந்திகிராம் தொகுதி பாஜக வேட்பாளர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் அதே தொகுதியில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி என்பவர் போட்டியிடுகிறார் அவர் இன்று தனது தேர்தல் பிரசாரத்தின்போது கூறியதாவது:
 
திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி ஆகியவை மேற்கு வங்கத்தில் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து துண்டாட முயல்கின்றன. திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்கம், காஷ்மீராக மாறிவிடும். காஷ்மீரில் பண்டிட் சமூகத்தினருக்கு என்ன நடக்குமோ அதுதான் இங்கு உங்களுக்கும் நடக்கும்.
 
மேற்கு வங்கத்துக்கு மண்ணின் மகள்தான் தேவை. ஆனால், மம்தாவை இந்த மக்கள் சொந்த மகளாக ஏற்கமாட்டார்கள். நீங்கள் ஊடுருவல்காரர்கள், ரோஹிங்கியாக்களின் அத்தை. திரிணமூல் காங்கிரஸ் கட்சியாக இல்லாமல் தனியார் நிறுவனமாக மாறிவிட்டது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தாதான் நிறுவனத்தின் தலைவர். ஊழல் படிந்த அவரின் மருமகன்தான் இயக்குநர்.
 
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டம், நிலக்கரி கடத்தல், பசுக்கடத்தல் ஆகியவற்றில் பணத்தைக் கொள்ளையடித்தார்கள்''.
 
இவ்வாறு சுவேந்து அதிகாரி பேசினார்