1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 மே 2020 (21:02 IST)

கொரோனா எதிரொலி: ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறதா மும்பை புனே?

கொரோனா எதிரொலியாக மும்பை மற்றும் புனே நகரங்கள் இராணுவத்திடம் ஒப்படைக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருவதால் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நாட்டிலேயே மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நகரங்களாக மும்பை புனே ஆகியவை உள்ளன இந்த இரு நகரங்களும் வரும் சனிக்கிழமை முதல் 10 நாட்களுக்கு இராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் இதனை அடுத்து கடைகள் திறக்க வாய்ப்பில்லை என்பதால் பால், மருந்து பொருட்கள்,  காய்கறி, மளிகை பொருட்கள் ஆகிய தேவையானதை வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது
 
ஆனால் இந்த வதந்திகளை மறுத்த மகாராஷ்டிரா அரசு இராணுவத்திடம் மும்பை, புனே ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் பொதுமக்கள் யாரும் பயப்படவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வதந்தியை பரப்பியது யார் என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது