வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 19 மே 2021 (17:03 IST)

டவ்தேவ் புயல் பாதிப்பு: உடனடியாக ரூ.1000 கோடி விடுவிக்க பிரதமர் மோடி உத்தரவு

சமீபத்தில் அரபிக்கடலில் உருவான டவ்தேவ் புயல் கேரளா குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களை புரட்டிப் போட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டது என்பதும் சுமார் 6 ஆயிரம் கிராமங்களில் மின் வசதி துண்டிக்கப்பட்டு அந்த பகுதியில் வாழும் மக்கள் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதனை அடுத்து மீட்பு படையினர் இரவு பகலாக அம்மாநிலத்தில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார் 
 
இதன் பின்னர் அவர் இந்த புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டதோடு காயமடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். மேலும் புயல் பாதித்த குஜராத் மாநிலத்தில் நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக ரூபாய் 1000 கோடி விடுவிக்கவும் அவர் உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது