I.N.D.I.A கூட்டணியின் கூட்டம் ரத்துக்கு சனாதனம் தான் காரணம்: மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா.
இந்தியா கூட்டணியின் கூட்டம் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் அடுத்த மாதம் நடைபெற இருந்த நிலையில் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு சனாதனத்திற்கு எதிராக பேசியதால் மக்களின் கோபம் தான் காரணம் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
குவாலியர் நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் மகாத்மா காந்தியின் சமாதான தர்மத்தை அழிக்கவும், நாடு முழுவதும் ஊழலை பரப்பவும் எதிர்கட்சியின் I.N.D.I.A கூட்டணி விரும்புகிறது என்றும் ஆனால் சனாதனம் எதிர்ப்பு காரணமாக மக்களின் கோபத்தை உணர்ந்துதான் I.N.D.I.A கூட்டணியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பாரதிய ஜனதா மீண்டும் வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva