பாஜகவில் இணைந்தார் மெட்ரோ மேன் ஸ்ரீதரன்!

பாஜகவில் இணைந்தார் மெட்ரோ மேன் ஸ்ரீதரன்!
siva| Last Updated: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (07:50 IST)
பாஜகவில் இணைந்தார் மெட்ரோ மேன் ஸ்ரீதரன்!
மெட்ரோ மென் என்றழைக்கப்பட்ட ஸ்ரீதரன் என்பவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் அதிகாரபூர்வமாக தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் மெட்ரோவில் பல வருடங்கள் பணிபுரிந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். 88 வயதான இவர் பாஜகவில் இணைய வேண்டும் என்ற விருப்பத்தை சமீபத்தில் தெரிவித்திருந்தார்

மேலும் பாஜக கேரளாவில் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் முதல்வர் பதவியை ஏற்கத் தயார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் தலைமையில் நடந்த விஜய யாத்திரை கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீதரன் தன்னை பாஜகவில் இணைந்து கொண்டார்

இதனை அடுத்து அவர் கூறியபோது எனது வாழ்க்கையில் மிக முக்கிய தருணங்களில் ஒன்று என்றும் 88 வயதில் பாஜகவில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி என்றும் அவர் கூறினார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதில் மேலும் படிக்கவும் :