கணவனை நம்பி குழந்தைகளை விட்டுச்சென்ற மனைவி – வீடுவந்த போது அதிர்ச்சி !

மலானி தன் குடும்பத்தினருடன்
Last Modified புதன், 12 பிப்ரவரி 2020 (08:33 IST)
மலானி தன் குடும்பத்தினருடன்

டெல்லியில் பெற்ற தந்தையே குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்தவர்கள் மதூர் மலானி மற்றும் ரூபாலினி ஆகிய தம்பதிகள். இவர்களுக்கு சமிஷா என்ற மகளும் ஸ்ரேயன்ஷ் என்ற மகனும் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக மலானி வேலைப் பார்த்த காகித தொழிற்சாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு ரூபாலினி குழந்தைகளை தன் வீட்டில் கணவரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவர் திரும்பி வந்து பார்த்த போது வீடு பூட்டியிருந்துள்ளது. அதை அடுத்து அவர் மாற்று சாவி போட்டுத் திறந்து பார்த்த போது குழந்தைகள் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர்.

இதையடுத்து அவரது கணவரைப் போலிஸார் தேடிய போது அருகில் உள்ள ரயில்வே நிலையத்தில் அவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு கொலைகள் மற்றும் தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :