திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 15 நவம்பர் 2020 (18:05 IST)

ஆபாச பட லிங்கை அனுப்பிய தேவஸ்தான ஊழியர்… அதிர்ச்சியில் உறைந்த பக்தர்!

திருப்பதி தேவஸ்தான சேனலில் இருந்து பக்தர் ஒருவருக்கு ஆபாச பட லிங்க் அனுப்பப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் நிர்வாகத்துக்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் என்ற பெயரில் இயக்கப்பட்டு வருகிறது. இதில், 11 மணிநேரம் நேரலையாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்நிலையில் இந்த சேனல் நிர்வாகத்துக்கு பக்தர் ஒருவர் சேனலின் ஒளிபரப்பப்பரப்பப் பட்ட நிகழ்ச்சி ஒன்றின் லிங்கைக் கேட்டுள்ளார்.

இதனால் அவருக்கு சேனலில் இருந்து அனுப்பப்பட்ட லிங்கை அவர் திறந்து பார்த்த போது அதில் ஆபாசப் பட இணையதளம் திறந்துள்ளது. இதையடுத்து அவர் இதுகுறித்து புகார் அளிக்க, குடிபோதையில் தவறான லிங்கை அனுப்பிய ஊழியர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.