இந்தியா கூட்டணி தலைவர்.. மம்தா பானர்ஜிக்கு குவியும் ஆதரவு.. ஓகே சொன்ன லாலு..!
இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தயார் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் தெரிவித்த நிலையில் அவருக்கு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
தற்போது இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே இருந்து வரும் நிலையில் அவரது செயல்பாடுகள் திருப்தி இல்லை என்றும் நடைபெற்ற முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மகாராஷ்டிரா மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் சுத்தமாக மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களே புலம்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்று வழிநடத்த தயார் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்த நிலையில் அவருக்கு சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தது.
இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் அவர்களும் மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி தலைவராக தனது ஆதரவை தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் உள்பட பலர் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவர் விரைவில் இந்தியா கூட்டணியை தலைமையேற்று நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran