வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 நவம்பர் 2020 (13:53 IST)

கொரோனா 2 ஆம் அலை: மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு!!

கொரோனா இரண்டாம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவின் சில மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.  
 
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட  தகவலின் படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90,50,598 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 46,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  
 
கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,726 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84,78,124 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், கொரோனா 2 ஆம் அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் அகமதாபாத், சூரத், வதீதரா, ராஜ்கோட் ஆகிய நகரங்கள் இரவு 9 முதல் காலை 6 வரை காலவரையற்ற ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  குறிப்பாக அகமதாபாத்தில் வெள்ளி இரவு 9 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை 57 மணி நேர முழு ஊரடங்கு அமலில் இருக்கும். 
 
இதேபோல மத்திய பிரதேசத்தில் போபால், இந்தூர், குவாலியர், ரத்லம், விதிசா ஆகிய மாவட்டங்களில் இரவு 10 முதல் காலை 6 வரை காலவரையற்ற ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.