உணவு கலப்படம் செய்தால் ஆயுள்தண்டனை

food
Sinoj| Last Modified சனி, 27 பிப்ரவரி 2021 (18:46 IST)

மத்திய பிரதேசத்தில் உணவு கலப்படம் செய்தால் ஆயுள்தண்டனை விதிக்கும்
சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.


சமீப காலமாக உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைக் குறைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்தால் குற்றவியல் தண்டனைச் சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதம் அளித்துள்ளது. எனவே இந்த மாநிலத்தில் உணவுக் கலப்பட்டத்திற்கான தண்டனை முதலில் இருந்த பின்னர் 3 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், மக்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுக் கலப்படத்திற்கு தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார்.

மேலும்,காலாவதியான பொருட்களை விற்பவர்களைத் தண்டிப்பதற்காக சட்டவழிமுறைகளுக்கும் மாநில அரசு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.இதில் மேலும் படிக்கவும் :